8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 111

/ 604
Page 111

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

5. Al-Ma'idahسورة المائدة

5:18

وَقَالَتِ ٱلْيَهُودُ وَٱلنَّصَـٰرَىٰ نَحْنُ أَبْنَـٰٓؤُا۟ ٱللَّهِ وَأَحِبَّـٰٓؤُهُۥ ۚ قُلْ فَلِمَ يُعَذِّبُكُم بِذُنُوبِكُم ۖ بَلْ أَنتُم بَشَرٌ مِّمَّنْ خَلَقَ ۚ يَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ ۚ وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ وَإِلَيْهِ ٱلْمَصِيرُ

இன்னும், யூதர்களும், கிறிஸ்தவர்களும், “நாங்கள் அல்லாஹ்வுடைய குமாரர்கள், அவனது நேசர்கள்” என்று கூறுகின்றனர், “அவ்வாறாயின் உங்கள் குற்றங்களுக்காக அவன் உங்களை ஏன் வேதனை செய்கிறான், (உண்மை) அவ்வாறன்று! நீங்களும் அவன் படைத்த (மற்ற) மனிதர்கள் (போன்று)தாம் (என்று நபியே!) நீர் கூறுவீராக! (ஆகவே, உங்களிலும்) அவன் நாடியவர்களை, மன்னிக்கிறான், இன்னும், அவன் நாடியவர்களை வேதனை செய்கிறான்” வானங்களுடைய மற்றும் பூமியுடைய இன்னும் அவை இரண்டிற்கு மத்தியில் இருப்பவைகளுடைய ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, அவனளவில்தான் (யாவரும்) மீண்டும் செல்ல வேண்டியதிருக்கிறது.

And (both) the Jews and the Christians say: "We are the children of Allâh and His loved ones." Say: "Why then does He punish you for your sins?" Nay, you are but human beings of those He has created, He forgives whom He wills and He punishes whom He wills. And to Allâh belongs the dominion of the heavens and the earth and all that is between them; and to Him is the return (of all).

5:19

يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ قَدْ جَآءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ عَلَىٰ فَتْرَةٍ مِّنَ ٱلرُّسُلِ أَن تَقُولُوا۟ مَا جَآءَنَا مِنۢ بَشِيرٍ وَلَا نَذِيرٍ ۖ فَقَدْ جَآءَكُم بَشِيرٌ وَنَذِيرٌ ۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

வேதத்தையுடையவர்களே! (ஈஸாவுக்குப் பின்னர்,) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “நன்மாராயங் கூறுபவரோ, அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரோ எங்களிடம் வரவேயில்லை,” என்று நீங்கள் (குறை) கூறாதிருப்பதற்காக (அல்லாஹ்வின் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்ற நம்முடைய (இத்)தூதர் திட்டமாக உங்களிடம் வந்து விட்டார் – நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரும் திட்டமாக உங்களிடம் வந்து விட்டார் - இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.

O people of the Scripture (Jews and Christians)! Now has come to you Our Messenger (Muhammad صلى الله عليه وسلم) making (things) clear unto you, after a break in (the series of) Messengers, lest you say: "There came unto us no bringer of glad tidings and no warner.1" But now has come unto you a bringer of glad tidings and a warner. And Allâh is Able to do all things.

  1. a) See the footnote of (V.3:85) and see (V.3:116).

    b) See the footnote (B) of (V.2:252).

5:20

وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦ يَـٰقَوْمِ ٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنۢبِيَآءَ وَجَعَلَكُم مُّلُوكًا وَءَاتَىٰكُم مَّا لَمْ يُؤْتِ أَحَدًا مِّنَ ٱلْعَـٰلَمِينَ

அன்றியும் மூஸா தன் சமூகத்தாரிடம், “என் சமூகத்தினரே, அவன் உங்களில் நபிமார்களை ஆக்கிய நேரத்தில் உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் நினைத்துப் பாருங்கள், மேலும், (ஃபிர் அவ்னிடம் அடிமைகளாயிருந்த) உங்களை அரசர்களாகவும் அவன் ஆக்கினான். இன்னும், அகிலத்தாரில் மற்றெவருக்குமே கொடுக்காதவற்றையும், உங்களுக்கு அவன் கொடுத்திருக்கிறான், என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக).

And (remember) when Mûsâ (Moses) said to his people: "O my people! Remember the Favour of Allâh to you when He made Prophets among you, made you kings and gave you what He had not given to any other among the ‘Âlamîn (mankind and jinn, in the past)."

5:21

يَـٰقَوْمِ ٱدْخُلُوا۟ ٱلْأَرْضَ ٱلْمُقَدَّسَةَ ٱلَّتِى كَتَبَ ٱللَّهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوا۟ عَلَىٰٓ أَدْبَارِكُمْ فَتَنقَلِبُوا۟ خَـٰسِرِينَ

(மேலும்,) “என் சமூகத்தினரே! அல்லாஹ் உங்களுக்கென விதித்த பரிசுத்தமான பூமியில் (எதிரியுடன் யுத்தம் செய்து அதில்) பிரவேசியுங்கள், இன்னும், (அவர்களுக்கு) நீங்கள் புறமுதுகிட்டுத் திரும்பாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” (என்றும் அவர் கூறினார்.)

"O my people! Enter the holy land (Palestine) which Allâh has assigned to you and turn not back (in flight); for then you will be returned as losers."

5:22

قَالُوا۟ يَـٰمُوسَىٰٓ إِنَّ فِيهَا قَوْمًا جَبَّارِينَ وَإِنَّا لَن نَّدْخُلَهَا حَتَّىٰ يَخْرُجُوا۟ مِنْهَا فَإِن يَخْرُجُوا۟ مِنْهَا فَإِنَّا دَٰخِلُونَ

அ(தற்க)வர்கள் “மூஸாவே! நிச்சயமாக அதில் மிக்க பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றனர், அவர்கள் அதைவிட்டு வெளியேறும் வரையில் நாங்கள் அதனுள் நுழையவே மாட்டோம், அவர்கள் அதைவிட்டு வெளியேறி விட்டால், நிச்சயமாக நாங்கள் நுழைந்துவிடக் கூடியவர்கள்” என்றனர்.

They said: "O Mûsâ (Moses)! In it (this holy land) are a people of great strength, and we shall never enter it till they leave it; when they leave, then we will enter."

5:23

قَالَ رَجُلَانِ مِنَ ٱلَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِمَا ٱدْخُلُوا۟ عَلَيْهِمُ ٱلْبَابَ فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَـٰلِبُونَ ۚ وَعَلَى ٱللَّهِ فَتَوَكَّلُوٓا۟ إِن كُنتُم مُّؤْمِنِينَ

(அல்லாஹ்வை) பயந்தோர்களிலிருந்த இரு மனிதர்கள் அவ்விருவரின் மீது அல்லாஹ் அருள் புரிந்திருந்தான், அவர்கள் (மற்றவர்களிடம்) “நீங்கள் (அவர்கள் பலத்தைப் பற்றிப் பயப்பட வேண்டாம்) அவர்களை எதிர்த்து (அந்நகரத்தின்) வாயில் வரையில் சென்று விடுங்கள், பின்னர், நீங்கள் அதில் நுழைந்து விட்டால் அப்போது நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்றவர்கள், நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் (உங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” என்று கூறினார்கள்.

Two men of those who feared (Allâh and) on whom Allâh had bestowed His Grace (they were يوشع وكالب Yûsha‘ and Kâlab) said: "Assault them through the gate; for when you are in, victory will be yours; and put your trust in Allâh if you are believers indeed."