8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 109

/ 604
Page 109

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

5. Al-Ma'idahسورة المائدة

5:10

وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَآ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْجَحِيمِ

மேலும், நிராகரித்து இன்னும், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கினார்களே அத்தகையோர்-அவர்களே நரகவாசிகளாவர்.

And those who disbelieve and deny our Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) are those who will be the dwellers of the Hell-fire.

5:11

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ هَمَّ قَوْمٌ أَن يَبْسُطُوٓا۟ إِلَيْكُمْ أَيْدِيَهُمْ فَكَفَّ أَيْدِيَهُمْ عَنكُمْ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ

விசுவாசங்கொண்டோரே! ஒரு கூட்டத்தினர் உங்களுக்குத் தீங்கிழைக்கத் தீர்மானித்துத் தங்கள் கைகளை உங்கள் அளவில் நீட்டியபொழுது அவர்கள் கைகளை உங்களைவிட்டுத் தடுத்து அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள், இன்னும், அல்லாஹ்வையே பயப்படுங்கள், அன்றியும் விசுவாசிகள் (யாவரும்) அல்லாஹ் (ஒருவன்) மீதே (தங்களின் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கவும்.

O you who believe! Remember the Favour of Allâh unto you when some people desired (made a plan) to stretch out their hands against you, but (Allâh) held back their hands from you. So fear Allâh. And in Allâh let the believers put their trust.

5:12

۞ وَلَقَدْ أَخَذَ ٱللَّهُ مِيثَـٰقَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ ٱثْنَىْ عَشَرَ نَقِيبًا ۖ وَقَالَ ٱللَّهُ إِنِّى مَعَكُمْ ۖ لَئِنْ أَقَمْتُمُ ٱلصَّلَوٰةَ وَءَاتَيْتُمُ ٱلزَّكَوٰةَ وَءَامَنتُم بِرُسُلِى وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمُ ٱللَّهَ قَرْضًا حَسَنًا لَّأُكَفِّرَنَّ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۚ فَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ

இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் திட்டமாக உறுதிமொழி வாங்கியிருக்கின்றான், மேலும், அவர்களிலிருந்தே பன்னிரண்டு (நம்பிக்கைக்குரிய) பொருப்பாளர்களை நாம் அனுப்பியிருக்கின்றோம், (அவ்வாறு உறுதிமொழி வாங்கியபோது அவர்களிடம்) “நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்” என அல்லாஹ் கூறினான், “நீங்கள் தொழுகையைத் தவறாது நிறைவேற்றி ஜகாத்தும் கொடுத்து என் தூதர்களையும் விசுவாசித்து அவர்களுக்கு உதவியும் புரிந்து (சிரமத்திலிருப்பவர்களுக்கு) அல்லாஹ்வுக்கு அழகிய கடனாக கடனும் கொடுத்தீர்களானால், நிச்சயமாக நான் (இவைகளை) உங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக்கிக் வைத்து சுவனபதிகளிலும் உங்களைப் பிரவேசிக்கச் செய்வேன், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், ஆகவே, உங்களில் இதற்குப் பின்னர் எவர் நிராகரித்து விட்டாரோ, அப்பொழுது நிச்சயமாக அவர் நேர் வழியிலிருந்து தவறிவிட்டார் (என்று அல்லாஹ் கூறினான்).

Indeed Allâh took the covenant from the Children of Israel (Jews), and We appointed twelve leaders among them. And Allâh said: "I am with you if you perform As-Salât (Iqâmat-as-Salât ) and give Zakât and believe in My Messengers; honour and assist them, and lend a good loan to Allâh, verily, I will expiate your sins and admit you to Gardens under which rivers flow (in Paradise). But if any of you after this, disbelieved, he has indeed gone astray from the Straight Path."

5:13

فَبِمَا نَقْضِهِم مِّيثَـٰقَهُمْ لَعَنَّـٰهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَـٰسِيَةً ۖ يُحَرِّفُونَ ٱلْكَلِمَ عَن مَّوَاضِعِهِۦ ۙ وَنَسُوا۟ حَظًّا مِّمَّا ذُكِّرُوا۟ بِهِۦ ۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَىٰ خَآئِنَةٍ مِّنْهُمْ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۖ فَٱعْفُ عَنْهُمْ وَٱصْفَحْ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ

அவர்கள் தங்களுடைய உறுதிமொழிக்கு மாறு செய்ததன் காரணமாக நாம் அவர்களை சபித்துவிட்டோம், அவர்களுடைய இதயங்களை கல் நெஞ்சங்களாகவும் ஆக்கிவிட்டோம், (அவர்கள் தங்கள் வேத) வசனங்களை அவற்றின் சரியான இடங்களிலிருந்து மாற்றி விடுகிறார்கள், அன்றியும் அவர்கள் எதனைக் கொண்டு உபதேசிக்கப்பட்டனரோ அதிலிருந்து ஒரு பாகத்தை (இந்நபியைப் பற்றி அதில் அவர்களுக்கு நினைவூட்டப்பட்டிருந்ததை) மறந்தும் விட்டார்கள், இன்னும், நபியே! அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோர் ஏதேனுமொரு மோசடியின் மீது இருப்பதை நீர் சதா கண்டு கொண்டிருப்பீர், ஆகவே, இவர்களை நீர் மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக, நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.

So, because of their breach of their covenant, We cursed them and made their hearts grow hard. They change the words from their (right) places and have abandoned a good part of the Message that was sent to them.1 And you will not cease to discover deceit in them, except a few of them. But forgive them and overlook (their misdeeds). Verily, Allâh loves Al-Muhsinûn (good-doers - See V.2:112).

  1. a) i.e. the Jews were ordered in the Taurât (Torah) to follow Prophet Muhammad صلى الله عليه وسلم when he would come as a Messenger of Allâh to all mankind.

    [See (V.7:157) and its footnote].

    b) See the footnote of (V.41:46)