மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
وَمَآ أَنتَ بِهَـٰدِى ٱلْعُمْىِ عَن ضَلَـٰلَتِهِمْ ۖ إِن تُسْمِعُ إِلَّا مَن يُؤْمِنُ بِـَٔايَـٰتِنَا فَهُم مُّسْلِمُونَ
குருடர்களுக்கு- அவர்களுடைய வழிகேட்டை விட்டும் (நீக்கி) நேர்வழி காட்டுபவராகவும் நீர் இல்லை, நம்முடைய வசனங்களைக் கொண்டு விசுவாசம் கொள்கிறவரைத்தவிர (வேறெவரையும்) நீர் (அவற்றைச்) செவியுறச் செய்ய முடியாது. அவர்கள் (முற்றிலும்) கீழ்படிந்து நடப்பவர்கள்.
Nor can you lead the blind out of their error. You can only make to hear those who believe in Our Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.), and who have submitted (themselves to Allâh in Islâm as Muslims).
۞ وَإِذَا وَقَعَ ٱلْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَآبَّةً مِّنَ ٱلْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ ٱلنَّاسَ كَانُوا۟ بِـَٔايَـٰتِنَا لَا يُوقِنُونَ
(இறுதி நாளைப் பற்றி நம்முடைய) கூற்று அவர்கள் மீது நிகழ்ந்தும் விட்டால், அவர்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு பிராணியை நாம் வெளிப்படுத்துவோம், நிச்சயமாக மனிதர்கள், நம்முடைய வசனங்களை உறுதி கொள்ளாதர்வர்களாக இருந்தார்கள் என்று அது அவர்களிடம் (தெளிவாகப்) பேசும்.
And when the Word (of torment) is fulfilled against them, We shall bring out from the earth a beast1 for them, to speak to them because mankind believed not with certainty in Our Ayât (Verses of the Qur’ân and Prophet Muhammad صلى الله عليه وسلم).
See the footnote of (V.6:158).
وَيَوْمَ نَحْشُرُ مِن كُلِّ أُمَّةٍ فَوْجًا مِّمَّن يُكَذِّبُ بِـَٔايَـٰتِنَا فَهُمْ يُوزَعُونَ
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்து நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களை, ஒரு படையாக நாம் ஒன்று திரட்டும் நாளை (நபியே நீர் நினைவு கூர்வீராக!) பின்னர் (மஹ்ஷர் மைதானத்தின் பால் செல்லும்போது அவர்களில் முன்னுள்ளவர்களுடன் அவர்களில் பின்னுள்ளவர்கள் சேர்ந்து கொள்வதற்காக) அவர்கள் நிறுத்திவைக்கப்படுவர்.
And (remember) the Day when We shall gather out of every nation a troop of those who denied Our Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.), and (then) they (all) shall be driven (to the place of reckoning),
حَتَّىٰٓ إِذَا جَآءُو قَالَ أَكَذَّبْتُم بِـَٔايَـٰتِى وَلَمْ تُحِيطُوا۟ بِهَا عِلْمًا أَمَّاذَا كُنتُمْ تَعْمَلُونَ
முடிவாக-அவர்கள் (யாவரும் தங்கள் இரட்சகனிடம்) வந்து விடுவார்களானால், (அவர்களிடம்) “நீங்கள் என்னுடைய வசனங்களை-அவற்றை முழுமையாக நீங்கள் அறிந்து கொள்ளாமல் இருந்தும் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களா? அல்லது என்னதான் நீங்கள் செய்துகொண்டிருந்தீர்கள்?” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கேட்பான்.
Till, when they come (before their Lord at the place of reckoning), He will say: "Did you deny My Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) whereas you comprehended them not by knowledge (of their truth or falsehood), or what (else) was it that you used to do?"
وَوَقَعَ ٱلْقَوْلُ عَلَيْهِم بِمَا ظَلَمُوا۟ فَهُمْ لَا يَنطِقُونَ
மேலும், அவர்கள் அநியாயம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்கள் மீது (தண்டனையைப் பற்றிய) கூற்று ஏற்பட்டுவிட்டது, ஆகவே அவர்கள் பேசமாட்டார்கள்.
And the Word (of torment) will be fulfilled against them, because they have done wrong, and they will be unable to speak (in order to defend themselves).
أَلَمْ يَرَوْا۟ أَنَّا جَعَلْنَا ٱلَّيْلَ لِيَسْكُنُوا۟ فِيهِ وَٱلنَّهَارَ مُبْصِرًا ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
நிச்சயமாக நாம் இரவை, அதில் அவர்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலை (யாவற்றையும்) நன்கு பார்ப்பதற்காகவும் நாமே ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இதில் விசுவாசங்கொண்ட சமூகத்தார்க்குப் பல அத்ததாட்சிகள் இருக்கின்றன.
See they not that We have made the night for them to rest therein, and the day sight-giving? Verily, in this are Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.) for the people who believe.
وَيَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَفَزِعَ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُ ۚ وَكُلٌّ أَتَوْهُ دَٰخِرِينَ
ஸுர் (குழல்) ஊதப்படும் நாளில், அல்லாஹ்(காப்பாற்ற) நாடியவர்களைத் தவிர வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும் திடுக்கிட்டு விடுவார்கள், ஒவொருவரும் பணிந்தவர்களாக அவனிடம் வந்து விடுவர்.
And (remember) the Day on which the Trumpet will be blown - and all who are in the heavens and all who are on the earth, will be terrified except him whom Allâh will (exempt). And all shall come to Him, humbled.
وَتَرَى ٱلْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَهِىَ تَمُرُّ مَرَّ ٱلسَّحَابِ ۚ صُنْعَ ٱللَّهِ ٱلَّذِىٓ أَتْقَنَ كُلَّ شَىْءٍ ۚ إِنَّهُۥ خَبِيرٌۢ بِمَا تَفْعَلُونَ
மேலும் நீர் மலைகளை-அவைகளைத்திடமானவையாக (அசையாததாக) நீர் எண்ணுகிறீர்-(எனினும் அந்நாளின்போது) அவை மேகம் நகர்வது போல் நகர்வதை நீர் காண்பீர், ஒவ்வொரு பொருளையும் (படைத்து,) உறுதியாக ஒழுங்குபடுத்திய, அல்லாஹ்வுடைய (கலைத்திறன் நிறைந்த) செயலாக (அவ்வாறு நடைபெறும்) நிச்சயமாக அவன், நீங்கள் செய்துகொண்டிருபவற்றை நன்கு உணர்பவன்.
And you will see the mountains and think them solid, but they shall pass away as the passing away of the clouds. The Work of Allâh, Who perfected all things, verily He is Well-Acquainted with what you do.
مَن جَآءَ بِٱلْحَسَنَةِ فَلَهُۥ خَيْرٌ مِّنْهَا وَهُم مِّن فَزَعٍ يَوْمَئِذٍ ءَامِنُونَ
எவர் ஒரு நன்மையைக் கொண்டு வந்தாரோ, அதைவிட மிகச் சிறந்த (கூலியான)து அவருக்கு உண்டு, மேலும், (அவ்வாறு செய்யும்) அவர்கள் அந்நாளின் திடுக்கத்திலிருந்து அச்சமற்றவர்கள்.
Whoever brings a good deed (i.e. Belief in the Oneness of Allâh along with every deed of righteousness), will have better than its worth; and they will be safe from the terror on that Day.
وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَكُبَّتْ وُجُوهُهُمْ فِى ٱلنَّارِ هَلْ تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ
மேலும், எவர் ஒரு தீமையைக்கொண்டு வந்தாரோ, அவர்களுடைய முகங்கள் நரகத்தில் குப்புறத்தள்ளப்படும், நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளுக்கன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்க்கப்படுகிறீர்களா? (என்று கேட்கப்படுவர்.)
And whoever brings an evil deed (i.e. Shirk - polytheism, disbelief in the Oneness of Allâh and every evil sinful deed), they will be cast down (prone) on their faces in the Fire. (And it will be said to them) "Are you being recompensed anything except what you used to do?"
إِنَّمَآ أُمِرْتُ أَنْ أَعْبُدَ رَبَّ هَـٰذِهِ ٱلْبَلْدَةِ ٱلَّذِى حَرَّمَهَا وَلَهُۥ كُلُّ شَىْءٍ ۖ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ ٱلْمُسْلِمِينَ
“நான் கட்டளையிடப்பட்டதெல்லாம் (மக்காவாகிய) இந்த ஊரின் இரட்சகனை நான் வணங்குவதைத்தான், அவன் எத்தகையவனென்றால், இதை இன்னும், அவனுக்கே முற்றிலும் கீழ்படிந்தவர்களில் உள்ளவனாக (முஸ்லிமாக) இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று நபியே! நீர் கூறுவீராக!)
I (Muhammad صلى الله عليه وسلم) have been commanded only to worship the Lord of this city (Makkah), Who has sanctified it and to Whom belongs everything. And I am commanded to be from among the Muslims (those who submit to Allâh in Islâm).1
a) Narrated Ibn ‘Abbâs رضي الله عنهما : On the day of the conquest of Makkah, Allâh’s Messenger صلى الله عليه وسلم said: "Allâh has made this town a sanctuary. Its thorny bushes should not be cut, its game should not be chased, and its fallen things should not be picked up except by one who would announce them publicly." (Sahih Al-Bukhari, Vol.2, Hadîth No.657).
b) See the footnote of (V.2:191).
وَأَنْ أَتْلُوَا۟ ٱلْقُرْءَانَ ۖ فَمَنِ ٱهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِى لِنَفْسِهِۦ ۖ وَمَن ضَلَّ فَقُلْ إِنَّمَآ أَنَا۠ مِنَ ٱلْمُنذِرِينَ
“அன்றியும், குர் ஆனை நான் ஓதிக்கொண்டிருக்குமாறும் (ஏவப்பட்டுள்ளேன். அதனைக் கொண்டு) எவர் நேர் வழியை அடைகின்றாரோ அவர் நேர்வழியடைவதெல்லாம் அவருக்கே (தன் சுய நன்மைக்ககாகவே) ஆகும், இன்னும் எவர் (இதிலிருந்து) வழி தவறி விடுகிறாரோ நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களில் உள்ளவனே” என்று கூறுவீராக!
And that I should recite the Qur’ân, then whosoever receives guidance, receives it for the good of his ownself; and whosoever goes astray, say (to him): "I am only one of the warners."
وَقُلِ ٱلْحَمْدُ لِلَّهِ سَيُرِيكُمْ ءَايَـٰتِهِۦ فَتَعْرِفُونَهَا ۚ وَمَا رَبُّكَ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ
மேலும், “புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது, தன்னுடைய அத்தாட்சிகளை அடுத்து அவன் உங்களுக்குக் காண்பிப்பான், அது சமயம் அவைகளை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள், என்று (நபியே!) நீர் கூறுவீராக! மேலும், நீங்கள் செய்துகொண்டிருப்பவற்றைப் பற்றி (நபியே!) உமதிரட்சகன் பராமுகமானவனாக இல்லை.
And say [(O Muhammad صلى الله عليه وسلم) to these polytheists and pagans.]: "All the praises and thanks be to Allâh. He will show you His Ayât (signs, in yourselves, and in the universe or punishments), and you shall recognise them. And your Lord is not unaware of what you do."