உரை: முஹம்மத் அஸ்லம் அல்மதனி حفظه الله
நிச்சயமாக இந்த மார்க்கம் மாபெரும் அருட்கொடை. இஸ்லாம் என்றால் ஏகத்துவத்தினால் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து, அவனது கட்டளைகளை பெருமையின்றி சிரம் தாழ்த்தி நிறைவேற்றி, இணைவைத்தலையும் இணைவைப்போரையும் நேசம் கொள்ளாமல் (அவர்களை) விட்டு விலகி இருப்பதாகும். இதுதான் இஸ்லாம் மார்க்கம். இம்மார்க்கம் தான் அனைத்து இறைத்தூதர்கள் உடைய மார்க்கமாக இருந்தது.ஆகையால் யார் ஒருவர் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவரை பின்பற்றி, அவர் கொண்டு வந்த மார்க்கத்தை செயல்படுத்துகிறாரோ அவர் முஸ்லிமாவார், எதுவரையெனில் அல்லாஹ் ஒட்டுமொத்த மனித குலம் மற்றும் அகிலத்திற்கு முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தனது தூதராக அனுப்பாமல் இருக்கும் வரை. ஏனெனில் அவர்களுடைய வருகைக்குப் பிறகு முஹம்மது என்ற அந்த இறைத்தூதரை பின்பற்றுவதுதான் இஸ்லாம் என்று அர்த்தமானது. இந்த இஸ்லாம் ஐந்து தூண்களை கொண்டது.
1.வணக்கத்திற்குரிய தகுதியானவன் உண்மையில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை மற்றும் முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற ஷஹாதத்.
2.பின்பு தொழுகையை நிலை நாட்டுவது,
3.ஜகாத்தை கொடுப்பது.
4.ரமலான் மாத நோன்பை பிடிப்பது,
5.அல்லாஹ்வின் வீடான சங்கைமிக்க கஃபாவை ஹஜ் செய்வது. இந்த ஐந்து தூண்களான இந்த அஸ்திவாரத்தில் தான் இம்மார்க்கம் நிறுவப்பட்டுள்ளது.
Comments
No comments yet.