8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

An-Nisa 4:23

Mushaf
4:23

حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَـٰتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَٰتُكُمْ وَعَمَّـٰتُكُمْ وَخَـٰلَـٰتُكُمْ وَبَنَاتُ ٱلْأَخِ وَبَنَاتُ ٱلْأُخْتِ وَأُمَّهَـٰتُكُمُ ٱلَّـٰتِىٓ أَرْضَعْنَكُمْ وَأَخَوَٰتُكُم مِّنَ ٱلرَّضَـٰعَةِ وَأُمَّهَـٰتُ نِسَآئِكُمْ وَرَبَـٰٓئِبُكُمُ ٱلَّـٰتِى فِى حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ ٱلَّـٰتِى دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُوا۟ دَخَلْتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَـٰٓئِلُ أَبْنَآئِكُمُ ٱلَّذِينَ مِنْ أَصْلَـٰبِكُمْ وَأَن تَجْمَعُوا۟ بَيْنَ ٱلْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا

உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், (உங்கள்), சகோதரனுடைய புதல்விகளும், (உங்கள்), சகோதரியுடைய புதல்விகளும், உங்களுக்குப் பாலூட்டிய உங்கள் (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடிச் சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும், உங்கள்மீது (அவர்களைத் திருமணம் செய்வது) விலக்கப்பட்டுள்ளது, இன்னும் நீங்கள் உடலுறவு கொண்டு விட்டீர்களே, அத்தகைய உங்கள் மனைவியரிலிருந்து (முந்தைய கணவனிடத்துப் பிறந்து) உங்கள் மடிகளில் வளர்ந்துவரும் பெண்மக்களையும் (நீங்கள் திருமணம் செய்வது விலக்கப்பட்டிருக்கிறது). ஆனால், (நீங்கள் மணம் செய்து,) அவர்களுடன் உடலுறவு கொள்ளவில்லையானால், (அவளை விலக்கிவிட்டு அவளுடைய மகளை மணம்செய்து கொள்வதில்,) உங்கள்மீது குற்றமில்லை, இன்னும், உங்களுடைய முதுகந்தண்டுகளிலிருந்து உண்டான உங்கள் புதல்வர்களின் மனைவியர்களையும் (நீங்கள் மணம் செய்துகொள்வது விலக்கப்பட்டிருக்கிறது.) இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்த்துக்கொள்வதும் (விலக்கப்பட்டிருக்கிறது). இதற்கு முன்னர் நடந்துவிட்டவைகளைத் தவிர, (அவற்றை) நிச்சயமாக அல்லாஹ், மிக்க மன்னிப்பவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Forbidden to you (for marriage) are: your mothers, your daughters, your sisters, your father’s sisters, your mother’s sisters, your brother’s daughters, your sister’s daughters, your foster mother who gave you suck, your foster milk suckling sisters, your wives’ mothers, your step daughters under your guardianship, born of your wives to whom you have gone in - but there is no sin on you if you have not gone in them (to marry their daughters), - the wives of your sons who (spring) from your own loins, and two sisters in wedlock at the same time, except for what has already passed; verily, Allâh is Oft-Forgiving, Most Merciful.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 4. An-Nisa →