8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Knowledge & scholars

Advice to Callers and Students of Knowledge – Shaykh Arafatஅழைப்பாளர்களுக்கும் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் உபதேசம் – அஷ்ஷெய்க் அரஃபாத் பின் ஹசன் அல் முஹம்மதி

This article is in Tamil.
Recording

அழைப்பாளர்களுக்கும் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் உபதேசம் – அஷ்ஷெய்க் அரஃபாத் பின் ஹசன் அல் முஹம்மதி

SoundCloud

السؤال : يقول (يسأل عن) نصيحة لطلاب العلم بالصبر على الدعوة، والاجتماع، والتزاور فيما بينهم؟

கேள்வி : கல்வி பயிலும்  மாணவர்கள் அழைப்பு பணியில் சப்ருடன் இருப்பதற்கும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொண்டு ஒற்றுமையாக இருப்பதற்கும் என்ன உபதேசம் செய்கிறீர்கள்?

الجواب : هذا هو الواجب۔ لا بدّ أن نصبر على بعضنا البعض، لا بدّ أن نتزاور، لا بدّ أن يُذكِّر بعضُنا بعضًا؛ الإنسان ضعيف، لا يقوم بنفسه، والذئب إنما يأكل القاصية من الغنم، فاحذروا۔

பதில் : (ஒற்றுமையாக இருப்பது) இதுதான் கடமை. கண்டிப்பாக நாம் ஒருவருக்கொருவர் பொறுமையுடன் இருக்க வேண்டும், ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள வேண்டும், ஒருவரை ஒருவர் நினைவூட்டிக் கொள்ள வேண்டும். மனிதன் பலவீனமானவன், தனித்து செயல்பட முடியாது. கூட்டத்தில் இருந்து தனித்து செல்லும் ஆட்டைத்தான் ஓநாய் உண்ணும், ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள்.

أنتم قائمون على دعوةٍ عظيمة، دعوةٍ مباركة۔ هذه دعوة أهل الحق، فلا تغيّروها بسبب بعض أخلاقنا، أو بسبب العجلة، أو بسبب التقاطع، أو بسبب الكلام الفارغ الذي يسبِّب الفرقة وينشر بذور الفرقة۔

மகத்துவமிக்க ஓர் அழைப்புப் பணியை மேற்கொள்கிறீர்கள். அதிகமான நன்மைகள் (பரகத்) நிறைந்த அழைப்புப் பணி, இது சத்தியவான்களின் அழைப்புப் பணி. நம்முடைய சில (கெட்ட) குணங்களினாலும், பொறுமையின்மையினாலும், (சகோதர) உறவுகளை முறிப்பதினாலும், மேலும் பிரிவினையின் முதல் படிக்கு காரணமாக இருக்கும் தேவையற்ற வெற்றுப் பேச்சுகள் போன்றவைகளால் இந்த அழைப்புப் பணியை (தவறாக) மாற்றி விடாதீர்கள்.

كونوا عقلاء، لا تتكلّموا إلا بالخير أو لتصمتوا، وليكنْ كلامكم فيه من الدعوة۔ من دعوة الإخوة: من الثناء على الدعاة، وعلى كل من كان نشيطًا في الدعوة وهو قادرٌ عليها۔ اتركوا كثرة الانتقاد: “فلان فعل”، “فلان قال”۔

அறிவார்ந்தவர்களாக இருங்கள். நன்மையானதை அன்றி வேறெதும் பேசாதீர்கள் அல்லது அமைதியாக இருங்கள். சகோதரர்களுக்கு துஆவும், அழைப்பாளர்களையும், தகுதி பெற்று அழைப்புப்பணியில் ஈடுபாட்டுடன் உள்ள அனைவரையும் ஊக்குவித்து பாராட்டல் உங்கள் பேச்சில் இருக்க வேண்டும். அதிகமாக விமர்சனம் செய்வதை தவிர்க்கவும் ‘அவர் இதைச் செய்தார்,’ ‘அவர் இதைச் சொன்னார்’ (என்று).

كلنا نخطئ۔ الذي يعمل في حقل الدعوة، ويجتهد، ويعلِّم الناس، ويدرِّس، وتجده – جزاه الله خيرًا – قد يُفتي الناسَ؛ لا بد أن يخطئ، لا بد من وقوعه في الوهم۔ (هو) بشر، حتى العلماء ليسوا معصومين۔ فأنت تأتي، تتبع الأخطاء، وتثيرها، وتتكلم هنا وهناك۔ إذا وجدت خطأً من أخيك أو سمعت شيئًا، نبِّهه، وأحسن الظنّ به أنه سيرجع۔ إذا لم يقبل منك، اذهب إلى من هو أفضل وأقرب۔ لأننا الآن في زمانٍ صار أحدُنا لا يقبل أن يسمع من فلانٍ وفلان، بسبب الشياطين التي دخلت بيننا وفرقتنا: شياطين الإنس والجن۔

நாம் அனைவரும் பிழை செய்பவர்கள். தஃவா களத்தில் பணிபுரிபவர், (அழைப்புப் பணியில்)  உழைப்பவர், மக்களுக்கு கற்பிப்பவர், பாடம் எடுப்பவர், – ஜஸாஹுல்லாஹு க்ஹைரன் – மக்களுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர், கண்டிப்பாக பிழை செய்ய நேரிடும் (இயல்பு), வேண்டும் என்று அல்லாமல், தெரியாமல் பிழை செய்திட நேரிடும். (அவர்) மனிதன்; உலமாக்கள் கூட, அவர்களும் பிழையே செய்யாதவர்கள் அல்ல.நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், (அவர்களின்) தவறுகளை பின்தொடர்ந்து, அதனைப் பரப்பி அதைப்பற்றி இங்கும் அங்கும் பேசுகிறீர்கள். உங்கள் சகோதரரிடமிருந்து ஒரு தவறைக் கண்டாலோ அல்லது (தவறான) ஒன்றை செவிமடுத்தாலோ, அதனை அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். அவர் அதனை திருத்திக்கொள்வார் என்று நல்லெண்ணம் கொள்ளுங்கள். உங்களிடமிருந்து ஏற்க மறுத்தால், அவருக்கு நெருக்கமான அல்லது உங்களைவிட சிறப்புமிக்க ஒருவரிடம் எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில் நாம் எப்படிப்பட்ட காலத்தில் இருக்கிறோம் என்றால், இன்னார் இன்னாரிடம் (உபதேசங்களை) செவியுற்றால் நாம் ஏற்றுக்கொள்வதில்லை, ஷைய்த்தான்கள்தான் காரணம் இதற்கு, நமக்கு மத்தியிலே ஊடுறுவி நம்மைப் பிரித்து விட்டன, மனித ஷைய்த்தான்கள் மற்றும் ஜின் ஷைய்த்தான்கள் (இரண்டுமே அடங்கும்).

لكن، لما يثني بعضُكم على بعض، ويذكر بعضُكم بعضًا بالخير، وتتزاورون، ويسأل بعضُكم عن بعض۔

ஆனால் நீங்கள் ஒருவருக்கொருவர் ஊக்குவித்துப் பாராட்டி,  நன்மையான காரியங்களை நினைவூட்டிக் கொண்டு, ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டு, விசாரித்துக் கொண்டால் (அதுதான் நலம்).

وليس هذا خاصًا بالشباب، حتى جيران المسجد، وكبار السن، وإخوانُنا الذين يصلّون معنا۔ إذا غابوا، أو حصل لهم سفر، نسأل عنهم۔ فلان إذا مرض، نزوره۔ هذه حقوق المسلمين بعضهم على بعض۔

இது வெறும் இளைஞர்களுக்கு மட்டும் அல்ல, மாறாக பள்ளிவாசலின் அண்டை வீட்டுக்காரர்கள், வயதில் மூத்தவர்கள், மற்றும் நம்முடன் தொழுகின்ற சகோதரர்கள் என அனைவருடனும் நாம் இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் பள்ளிக்கு ஒரு நாள் வரவில்லை என்றால், அல்லது பயணத்தில் இருந்தால், நாம் அவர்களை பற்றி விசாரிக்க வேண்டும். ஒருவர் நோய்வாய்ப்பட்டால், நாம் அவரை சந்தித்து நலம் விசாரிக்க வேண்டும். இது முஸ்லிம்களுள், ஒருவர் மற்றவரின் மீது உள்ள உரிமைகளாகும்.

حتى المبتدع، إن كنت ستزوره حتى تبين له وتنصحه، وتذكره لعله يرجع۔ لا سيما وأن كثيرًا من هؤلاء جُهّال؛ افعل ولا بأس۔ خاصةً من كان طالبًا للعلم، عنده قدرة، وهو متمكن، ينصح ويُبيِّن بحجةٍ وبرهان۔ أما الضعيف، أو الذي يخشى على نفسه، فلا يفعل۔

ஒரு பித்அத்வாதியாக இருப்பினும் சரி, அவரை நீங்கள் சந்தித்து, விளக்கங்கள் அளித்து, அறிவுரை கூறி நினைவூட்டினால், அவர்கள் சத்தியத்தின்பால் திரும்பலாம். ஏனெனில் அவர்களில் பலர் அறியாமையில் இருக்கிறார்கள்.

எனவே அவர்களை அழையுங்கள், அவ்வாறு செய்வதில் தவறில்லை. குறிப்பாக, ஒருவர் கல்வி கற்கும் மாணவராக இருந்து அதற்கான ஆற்றலை பெற்று, சத்தியத்தை தெளிவாக விளக்க முடியும் என்றால், ஆதாரங்களைக் கொண்டு அவர்களுக்கு விளக்கி உபதேசம் செய்ய வேண்டும். ஆனால், (கல்வியில்) பலவீனமானவர்கள் அல்லது (இவர்களைப் போன்றோர்களிடம் உரையாடுவதினால்) தன் நஃப்ஸிற்கு அஞ்சுகிறார்கள் என்றால் அவ்வாறு (அழைப்பு) செய்வது கூடாது.

கேள்விகளுக்கு: [email protected]

🌎 தொடர்ந்திருங்கள் நம்மோடு:


If this article benefited you, please share it.